முக்கிய புள்ளியை சந்திக்க போகும் ஓ பன்னீர்செல்வம்.! சலசலப்பில் இபிஎஸ் தரப்பு.!! - Seithipunal
Seithipunal



சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட்  தொடக்க விழாவில் ஜோதி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் 69 பேருக்கு தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பிரதமர் வழங்க உள்ளார். அதன்பிறகு சென்னையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி புறப்படுகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அவர் திட்டமிட்டு இருந்தார், ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால், சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை இபிஎஸ் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS May Be Meet PM Modi in Chennai Airport


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->