அதெல்லாம் பொய், நம்பீடாதிங்க, ஓபிஎஸ் தரப்பு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! நாளைக்கு இருக்கு டுவிஸ்ட்!
OPS give explanation about contest in ADMK general secretary post
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவரை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுவார் என செய்திகள் வெளியாகியது. இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் மறுப்பு செய்தி வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட, கழக நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட சட்டதிட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணாக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அட்டவணை சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (19-03-2023 ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், கழகத் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில், கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்யப்படுவதாக ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.
கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அதிமுக தலைமை கழகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
OPS give explanation about contest in ADMK general secretary post