உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட ஓபிஎஸ்! நீதிபதி வெளியிட்ட தகவல்!! நிம்மதியில் ஓபிஎஸ் தரப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டுமென ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்தலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடிந்தது. அந்த பொதுக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 15ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓபிஎஸ் தரப்பில் மனுவை விசாரித்தால் தங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தின் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு ஏன் அவசரம் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். அதிமுக தரப்பில் இருந்த ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கேட்ட தலைமை நீதிபதி, ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops case supreme court july 23


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->