உள்ளாட்சி தேர்தல்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்.!!
ops and eps new announcement for local body election
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 6.10.2021, 9.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன், மைதிலி திருநாவுக்கரசு - முன்னாள் எம்எல்ஏ., கழக அமைப்புச் செயலாளர், வாலாஜாபாத் பா, கணேசன் முன்னாள் எம்எல்ஏள்., கழக அமைப்புச் செயலாளர் ஆகியோர் இன்று முதல் கூடுதலாக நியமிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறிவிக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களோடு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இணைந்து தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
ops and eps new announcement for local body election