சமாதானம் ஆகாத ஓபிஎஸ்.. முழு முயற்சியில் இறங்கிய இபிஎஸ்.. ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.?
ops and eps issue in admk
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 6-வது நாளாக நேற்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தங்கள் ஆதரவுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். கட்சியின் மூத்த தலைவர்களான தம்பிதுரை, செங்கோட்டையன், செல்லூர் ராஜூ ஆகியோர் நேற்று காலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, மூவரும் ஓ பன்னீசெல்வம் இடத்திற்கு சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் தெரிவித்த தகவல்களுடன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடம் சென்று ஆலோசனை நடத்தினர். பன்னீர்செல்வத்தை எப்படியாவது சமாதானப் படுத்த வேண்டும் என்பதில் மூத்த தலைவர்கள் உறுதியாக உள்ளனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் இடம் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சிகள் மற்றும் தொண்டர்கள் நலன் கருதி தொடக்கத்தில் இருந்தே முதல்வர் பதவி, காட்சியில் முழு அதிகாரம், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் ஓபிஎஸ் கூறி உள்ளார்.
பொதுக்குழுவில் ஒற்றுமை தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி கட்சியைதனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக யாராவது வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்கை எதிர் கொள்வது எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவெடுத்துள்ளது. இதற்காக கட்சி வழக்கறிஞர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்து விட்டால் தான் கட்சியில் ஓரங்கட்டும் ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்பதை ஓ பன்னீர்செல்வம் உணர்ந்து உள்ளதாகவும், இதனால் 23-ம் தேதி நடைபெற உள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
English Summary
ops and eps issue in admk