அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் கட்சி விதிமுறைகளின்படி புதிய பதவியை உருவாக்க கட்சியை குழுவுக்கு அதிகாரம் கிடையாது. கட்சியின் பொதுச் பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால் பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்புகள் காரணமாக சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

இது அதிமுக விதிகளுக்கு முரணானது எனவும், ஜெயலலிதா இருந்த போது உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து விட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒரு உட்கட்சி விவகாரத்தில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பதை தேர்தல் ஆணையம் ஆராய முடியாது. கட்சியின் பிரதிநிதிகள் அளிக்கும் பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு நிர்வாகிகளை ஏற்றுக்கொள்வது, ஏற்றுக் கொள்ளாததும் தேர்தல் ஆணையத்தின் முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் எந்தவித தவறும் இல்லை என வழக்கை முடித்து வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and eps case in high court


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->