கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்! மக்களவையை ஒத்திவைத்த ஓம்பிர்லா...!
Opposition parties shouted and created a ruckus Om Birla adjourned Lok Sabha
இன்று பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது.இதில் இன்று தொடங்கவுள்ள இந்தத் கூட்டத்தொடரில் மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12 முதல் 18-ம் தேதி வரை பாராளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது.

மேலும், இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமான பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதுபோல, எதிர்க்கட்சிகளும் பல முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமை கோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசின் பதில் கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளன.
மேலும், பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கலவையை நண்பகல் 12 மணி வரைக்கும் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
English Summary
Opposition parties shouted and created a ruckus Om Birla adjourned Lok Sabha