ஒரே போடு!ஆப்ரேஷன் சித்தூர் ஒரு தோல்வி...! வேலைக்காகாத உள்துறை அமைச்சர்...! - சஞ்சய் ராவத் - Seithipunal
Seithipunal


சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் அவர்கள், ''காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூர் தோல்வியடைந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

எம்.பி. சஞ்சய் ராவத்:

இது குறித்து அவர் தெளிவாக தெரிவித்ததாவது, "பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் ஏன் நடந்தது? அதற்கு அமித் ஷா மட்டுமே பொறுப்பு. உள்துறை அமைச்சராக அவர் தோல்வியடைந்தவர். பிரதமர் மோடி அவரை ராஜினாமா செய்து பதவி விலகச் சொல்ல வேண்டும்.

ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு தோல்வி. பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதைக் கோரினார்" என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மேலும், உத்தவ் தாக்கரே காலில் விழாததால்தான் பாஜக சிவசேனாவைப் பிளவுபடுத்தியது என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.கடந்த ஜூன் 2022 இல், ஏக்நாத் ஷிண்டே உத்தவ் பிரிவுடன் முறித்துக் கொண்டு பாஜகவில் இணைந்து மஹாயுதி கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்தார்.

இடையிலும், மூன்றரை ஆண்டுகாலம் மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த பாஜக, பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. தங்கள் தோல்வியை மறைக்க எதற்கும் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் மீது பழி சுமத்துவதாக சஞ்சய் ராவத் விமர்சித்தார்.

இந்த மாதம் 7 ஆம் தேதி, இந்திய ராணுவம் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Operation sindhoor is a failure Home Minister is useless Sanjay Raut


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->