'தமிழகத்தை மீட்டெடுக்கும் சக்தி NDA -க்கு மட்டுமே உண்டு'...! - முருகன் அதிரடி பேச்சு!
Only NDA power restore Tamil Nadu Murugan dramatic speech
மத்திய அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் தளப் பதிவில், அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் சூழலை தீவிரப்படுத்தும் வகையில் நடைபெற்ற பிரசாரத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தோம் என தெரிவித்துள்ளார்.

அவிநாசி–திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி நடைபெற்ற இந்த பிரசாரத்தில், மக்கள் உற்சாகமாக திரண்டு ஆதரவு தெரிவித்தனர். தற்போதைய திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற ஒருமித்த மனநிலையுடன் தமிழக மக்களும், தேசிய ஜனநாயக கூட்டணியும் ஒரே திசையில் நகர்ந்து வருகிறார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி, சட்டம்–ஒழுங்கு நிலை மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்ற பல துறைகளில் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்து, தமிழகத்தை மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே திறன் வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவிநாசி தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் மற்றும் வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வழிகாட்டுதலுடன் செயல்படும் தாமரைச் சின்னத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.“தாமரையை மலரச் செய்வோம்… அவிநாசியை வளமாக மாற்றுவோம்!” என்ற முழக்கத்துடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
English Summary
Only NDA power restore Tamil Nadu Murugan dramatic speech