தாமரை சின்னத்தில் போட்டி என ஜி.கே. வாசன் முடிவுக்கு அதிருப்தி; நிர்வாகிகள் இருவர் ராஜினாமா..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள த.மா.கா.வுக்கு ராணிப்பேட்டை, ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து தொகுதிகளிலுமே பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டி இடுவோம் என்றும் தமாகாவின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

இந்த முடிவிற்கு தமாகா நிர்வாகிகள் இருவர் அதிருப்தி தெரிவித்து, தமாகா வட சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் பிஜு சாக்கோ மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது வட சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் பிஜு சாக்கோ இது குறித்து பேசுகையில்; ஐந்து தொகுதிகளை பெற்று, தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன? இந்த முடிவை கட்சியோ, பொதுக்குழுவோ சேர்ந்து எடுத்த முடிவாக தெரியவில்லை. ஜி.கே. வாசனின் தனிப்பட்ட முடிவாகத்தான் தெரிகிறது.

சென்னையிலும், காஞ்சிபுரத்திலும் அதிமுகவிடம் இருந்து ஒரு கவுன்சிலர் சீட் கூட ஜி.கே. வாசனால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இந்த ஐந்து தொகுதிகளில் ஏதாவது வெற்றி பெறும் தொகுதி இருக்கிறதா? என்.டி.ஏ. கூட்டணி, பாஜக என தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்று சொல்வதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

ஆனால், தமிழ்நாட்டில் இரட்டை இலையில் நிற்கலாம் எனும் விருப்பம் தான் பெரும்பான்மையானோருக்கு இருக்கும். ஆனால் இவர் ஏன் தாமரையை தேர்ந்தெடுத்தார் என்பது தெரியவில்லை'' என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Office bearers express dissatisfaction over GK Vasans decision to contest under the Lotus symbol


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->