ஓ பன்னீர்செல்வத்தின் திடீர் முடிவு.. நடக்கபோகும் மாற்றம்.? - Seithipunal
Seithipunal


பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல், பொதுக்குழு வேறு தேதிக்கு மாற்றப்பட்டது. 

இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வழக்கறிஞர் ஆகியோர் சென்றனர்.

ஒற்றை தலைமை சர்ச்சை குறித்து உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் முறையீடு செய்வதற்காக ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து டெல்லி செல்வதற்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவதுm குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு பாஜக சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவே டெல்லி செல்கிறேன் என தெரிவித்தார். 

இந்நிலையில், டெல்லி சென்ற உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், ஒற்றை தலைமை குறித்து பாஜக தலைவர்களை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில்,  அதிமுகவில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என அரசியல் வட்டாரம் பரபரப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

o panneerselvam may be meet bjp leaders


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->