அ.தி.மு.க. இணைந்தால்தான் அது நடக்கும்... ஒரே போடாக போட்ட ஓ.பி.எஸ்!
O Paneerselvam ADMK EPS election 2026
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்கு (SIR) இந்தியத் தேர்தல் ஆணையம் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், SIR பணிகளுக்குத் தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை என்றும், குறிப்பாகப் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அ.தி.மு.க. இணைப்பு குறித்த கருத்து
அ.தி.மு.க. அணிகள் இணைவது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: "அ.தி.மு.க. இணைந்தால்தான் வெற்றி பெற முடியும். அ.தி.மு.க. அணிகள் இணைவதற்கான பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இதுதொடர்பாக, தான் டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளதாக ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
மேலும், "அரசியலில் இருந்து தன்னை யாரும் தனிமைப்படுத்த முடியாது" என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
English Summary
O Paneerselvam ADMK EPS election 2026