குடும்பம் ஆள; அடிமைகளாக திமுக தொண்டர்கள்.. வெளுத்து வாங்கிய சீமான்.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது .இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது "தமிழை வைத்து, மொழிப்போரை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், அதனை கண்டு கொள்ளவில்லை. 

மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக அரசு எந்த விதமான நினைவு அரங்கங்களும் அமைக்கவில்லை. ஆனால், கருணாநிதி பெயரை அனைத்திற்கும் வைக்கின்றனர். எங்கும் தமிழ் இல்லை, திராவிட ஆட்சிகளால் தமிழ், இனம் அழிக்கப்படுகிறது. லஞ்சம், ஊழல், மது திணிப்பு என அனைத்தையும் சகித்துக்கொள்வதால் அவர்கள் குடும்பம் பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்து வைத்து, குடும்பம் ஆள்கிறது. அடிமைகளாக கட்சி தொண்டர்கள் உள்ளனர். 

எந்த மொழியும் கற்பது தவறில்லை, ஆனால் தாய் மொழியில் பேச வேண்டும், உணர்வுடன் இருக்க வேண்டும். சின்னத்தை பார்த்து வாக்களிக்கக்கூடாது, எண்ணத்தை பார்த்து வாக்களிக்கும் நிலை வர வேண்டும். தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டம் உள்ளது. ஆனால் சமச்சீர் கல்வி இல்லை. மதுக்கடையை அரசு நடத்துகிறது. ஆனால், கல்வியை வியாபாரமாக்கியுள்ளது. சேலம் மாநாட்டிற்காக 58 கோடி நிதி திரட்டிய திமுகவுக்கு 50 ஆயிரம் தன்னார்வலர்களை நியமித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமில்லை" என கடுமையாக  விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk seeman criticized dmk mkstalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->