கடற்கரை புதைப்பதற்கான இடமா? உலகப்புகழ்பெற்ற கடற்கரை ஒரு சிலரின் கல்லறையாக மாறியது எப்படி? சீமான் அதிரடி கேள்வி!
ntk seeman condemn to tn govt karunanithi mgr anna jj
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடற்கரை மக்கள் ரசிப்பதற்கான இடம்தானே தவிர வணிக வளாகம் நடத்துவதற்கான இடம் இல்லை என்கிறது மாண்பமை நீதிமன்றம்!
கடற்கரை மக்கள் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என்கிறது தமிழ்நாடு அரசு!
கடற்கரை பொழுதுப்போக்குவதற்கான இடம் மட்டும்தான், வியாபாரம் நடத்துவதற்கான இடம் இல்லை, போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என்றால், கடற்கரை புதைப்பதற்கான இடமா? உலகப்புகழ்பெற்ற கடற்கரை ஒரு சிலரின் கல்லறையாக மாறியது எப்படி?
நில ஆக்கிரமிப்பு, ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலை ஆக்கிரமிப்பு எல்லாம் குற்றம் என்றால் கடற்கரை ஆக்கிரமிப்பு மட்டும் சட்டப்படி சரியா? என்ற கேள்விக்கு எவரிடத்தில் பதிலுண்டு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
ntk seeman condemn to tn govt karunanithi mgr anna jj