அங்க ஆளூர் ஷா நவாஸ் பொங்க.. இங்க திருமாவளவன் இப்படி பேசுவது முறையா? நாதக இடும்பாவனம் கேள்வி!
NTK Idumbavanam karthi VCK THirumavalavan DMK MK Stalin
நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அதிமுகவோடு கூட்டணி சேரலாம். பாஜக இருப்பதால் அது முடியாது என்கிறார் திருமாவளவன்.
பாஜக இல்லையென்றால், அதிமுகவோடு கூட்டணி சேர்வதில் எந்தத் தயக்கமும் இல்லை என்கிறார் திருமா.
"மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்த கட்சி; இசுலாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்த கட்சி. அதிமுக எதிலும் உண்மையாக இருந்தது இல்லை" என விவாதங்களில் ஆளூர் ஷா நவாஸ் பொங்கிக் கொண்டிருக்க, "பாஜக இல்லையென்றால் அதிமுகவோடு சேரலாம்" எனப் போட்டுடைத்திருக்கிறார் திருமா.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதல் அனிதா மரணம் வரை அதிமுக ஆட்சியில் நடந்தேறிய பேரவலங்கள் எதுவும் அண்ணன் திருமாவுக்கு நெருடலாகவோ, உறுத்தலாகவோ இல்லை. பாஜக இல்லையென்றால், அதிமுகவோடு சேரலாமாம்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
NTK Idumbavanam karthi VCK THirumavalavan DMK MK Stalin