#BigBreaking || தமிழகத்தில் பூரண மதுவிலக்கு?! சற்றுமுன் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பெண்கள், குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்க தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை மேலூரில் பள்ளிக்கூடம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக்கை அகற்ற கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த கருத்தினை தெரிவித்துள்ளது.

மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் உயரும். குடிகாரர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும். இவை உள்ளிட்ட பல நல்ல முன்னேற்றங்களுக்கு வாய்ப்பு உள்ளது. நீதிமன்றத்தின் இந்த யோசனைகளை தமிழக அரசு கவனிக்குமா? என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகம் மதுவில் மூழ்கி உள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை. தமிழகத்தில் எத்தனை மதுபான கடைகள் உள்ளன. அமைவிட ஆட்சேபனை தொடர்பாக வந்த புகார்கள், நிராகரித்த புகார்கள் எவை, மாற்றியமைக்கப்பட்ட கடைகள் எத்தனை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NO TASMAC IN TN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->