தவெகவுடன் கூட்டணி அமைக்க யாரும் முன்வரவில்லை...! - அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம் - Seithipunal
Seithipunal


"தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கக் கூவிக் கூவி அழைத்தும் யாரும் முன்வரவில்லை" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக இயக்கம் பேய், பிசாசு போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படாது என்றும், மக்கள் சக்தி யார் பக்கம் இருக்கிறது என்பது மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகளில் தெரியவரும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், முதல்வர் ஸ்டாலினின் 60 ஆண்டுகால உழைப்பிற்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் இந்தத் தேர்தல் சான்றாக அமையும் எனத் தெரிவித்த அவர், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திமுகவின் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், குறிப்பாகச் சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளில் கடந்த முறையை விட அதிக வாக்குகள் கிடைக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No One Came Forward Form Alliance TVK Minister Sekar Babu Levels Harsh Criticism


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->