மோடியின் பாதங்களை நிதிஷ்குமார் தொட்டது பீகார்க்கு அவமானம் - கொளுத்திப்போடும் பிரசாந்த் கிஷோர்! - Seithipunal
Seithipunal


மோடியின் பாதங்களை தொட்டதன் மூலம் நிதிஷ்குமார் பீகார்க்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளார் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகாரன் ஜன் சுராஜ் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் பிரசாந்த் கிஷோர் பாகல்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் நாடாளுமன்ற தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரது கால்களில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வணங்கியது ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர் அந்த மாநில மக்களின் பெருமை மாநிலங்களின் முதல்வராக இருக்கக்கூடிய நிதிஷ்குமார் மோடியின் கால்களை தொட்டதன் மூலம் பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று கூறினார்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் பீகார் முதலமைச்சர் தனது பதவியை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார். தனது செல்வாக்கை பயன்படுத்தி மாநிலத்தின் நன்மைக்காக உறுதிப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் கடந்த 2015 ஆம் ஆண்டு பிகர் சட்டமன்ற தேர்தல் ஜனதா தளம் கட்சியின் வெற்றிக்காக வியூகங்களை வகுத்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்  ஜனதா தளத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்து வெளியேறினார். 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நரேந்திர மோடிக்காக வியூக வகுப்பாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitish Kumar touching Modi feet is a shame for Bihar Prashant Kishor


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->