மக்களுக்கு தேவையானதை முன்கூட்டியே அறிந்து செயல்படுபவர் மோடி- நிர்மலா புகழாரம்.!
Nirmala sitharaman Speech in Chennai
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், " பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த பல்வேறு நாடுகள் கூட தற்போது பின்தங்கி விட்டன. இப்படிப்பட்ட நிலையில், உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் வலுவாகி இருக்கிறது. அத்துடன் கொரானா காலத்தில் பல்வேறு நாடுகளும் பொருளாதாரத்தில் பின்தங்கி சமாளிக்க முடியாத அளவிற்கு வீழ்ச்சிக்கு சென்றது.
ஆனால் கொரா கால வீழ்ச்சிக்கு பின்னும் இந்தியா பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கிறது. இந்தப் பெருமை நமது பிரதமர் மோடியை தான் சேரும்." என்று தெரிவித்துள்ளார்
English Summary
Nirmala sitharaman Speech in Chennai