“சட்டபேரவையில் துகிலுரிப்பு: ஜெயலலிதா குற்றசாட்டு”.! மு.க ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திமுக சார்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மகாபாரதத்தையும் திரௌபதியையும் மேற்கோள் காட்டி பேசி இருந்தார்.

அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுத்த கட்சி திமுக. அவரை அவமானப்படுத்திவிட்டு எல்லாரும் உட்கார்ந்து சிரித்தார்கள்.

அன்று சட்ட சட்டப்பேரவையில் ஒரு உறுதிமொழி எடுத்துவிட்ட வெளியேறினார். நான் மீண்டும் முதல்வராக தான் வருவேன் என சப்தம் எடுத்தார். அதன் பிறகு அவர் சட்டப்பேரவைக்கு வரவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் முதல்வராக சட்டப்பேரவைக்கு வந்தார். அன்று ஆளுங்கட்சியாக அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவரின் புடவை பிடித்து இழுத்துவிட்டு இன்று திரௌபதியை குறித்து பேசுவதை என்னால் நம்ப முடியவில்லை" என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் "அவர் ஏதோ வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை பார்த்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை" என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பதில் அளித்து இருந்தார். ஆனால் அன்றைய சட்டப்பேரவை நிகழ்வு பல பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமுகவலைதள பக்கத்தில் "மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை பற்றி நான் மக்களவையில் பேசியதை விமர்சித்து, அப்போது வெளிநாட்டில் இருந்த இவர், நடக்காத சம்பவம் நடந்ததாக எப்படி கூறுகிறார், என்று கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்" என கடந்த கடந்த 1989 ஆம் ஆண்டு இந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தாக்கப்பட்டது குறித்தான பத்திரிக்கை செய்திகளை பதிவிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nirmala Sitharaman response to MKStalin comments


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->