இரவு நேர ஊரடங்கு அமல்.. மேலும் புதிய கட்டுப்பாடுகள்.. முதலமைச்சர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் முதலில் 12 மாவட்டங்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், நேற்று மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களை திரட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் உள்ளரங்கில் 50 பேரும், ஊர்வலமாக 100 பேர் வரை செல்லலாம். அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் பணிபுரியும் போது கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும். பள்ளி, கல்லூரி வரும் 30ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஷாப்பிங் மால்களில் ஒரே கடையில் பத்து பேருக்கு மேல் நிற்க கூடாது. ஷாப்பிங் மாலில் ஒரே நேரத்தில் 200 பேருக்கு மேல் செல்ல கூடாது என பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

night lockdown in punjab


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->