‘வி தி லீடர்ஸ்’ அமைப்பை பலப்படுத்த அடுத்த கட்ட நகர்வு...! அண்ணாமலையின் புதிய அரசியல் அகாடமி...! எப்போது தெரியுமா...? - Seithipunal
Seithipunal


அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, கோவையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் நெறிமுறை மற்றும் அரசியல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை வரும் 15-ந்தேதி அண்ணாமலை திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த ஜூன் 5-ந்தேதி அக்கட்சியில் இருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார்.

முதற்கட்டமாக இயக்கமாக செயல்படும் இந்த அமைப்பு, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், அடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார்.இதைத்தொடர்ந்து, கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து அமைப்பை விரிவுபடுத்தும் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கோவை நீலாம்பூர் பகுதியில், ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நெறிமுறை மற்றும் அரசியல் மையம்’ அமைக்கப்பட்டு வருகிறது.அரசியல் களத்தில் செயல்பட விரும்புபவர்களுக்கு தேவையான அறிவு, தலைமைத்துவப் பண்பு மற்றும் களப்பணி திறன்களை வளர்க்கும் வகையில் இந்த மையம் செயல்பட உள்ளது.

குறிப்பாக ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் உறுப்பினர்களுக்கு பல்வேறு துறைகள் தொடர்பான பயிற்சிகள் இங்கு வழங்கப்பட உள்ளன.இதுகுறித்து அந்த அமைப்பின் சமூக ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கூறியதாவது,"அரசியலமைப்பு, ஜனநாயகம், ஆட்சி நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், தலைமைப் பண்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பொது இயக்கம் என்பது தேர்தல் அரசியலோடு முடிந்துவிடக்கூடியது அல்ல. மக்களின் அன்றாட பிரச்சினைகளை கண்டறிந்து, அவர்களை ஒருங்கிணைத்து, அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் பொதுப்பணியின் முக்கிய நோக்கமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே இந்த பயிற்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் 15-ந்தேதி இந்த மையத்தை அண்ணாமலை தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக 100 பேருக்கு 2 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு 100 நாட்கள் களப்பயிற்சியும் அளிக்கப்படும்.அரசியல் மற்றும் பொதுப்பணியில் ஈடுபடுவோருக்கு தேவையான நடைமுறை அறிவையும் தலைமைத்துவ திறனையும் வளர்ப்பதே இந்தப் பயிற்சிகளின் நோக்கமாகும்” என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

next step to strengthen We the Leaders system Annamalai new political academy Do you know when


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->