#சற்றுமுன் || நெல்லிக்குப்பதில் செம்ம டிவிஸ்ட்., விசிக.,வுக்கு வேறு வழியே இல்லை., சற்றுமுன் அடுத்தடுத்து ராஜினாமா செய்த உடன்பிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் : புலியூர் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்ற திமுகவை சேர்ந்த புவனேஸ்வரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவையடுத்து புவனேஸ்வரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவின் புவனேஸ்வரி போட்டியிட வேண்டிய நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளதால்,  தற்போது அந்த பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியின் துணைத்தலைவர் துணைத் தலைவராக (திமுக சார்பாக) தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், கடலூர் : நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரபா என்பவர் பதவி விலகி உள்ளார். இந்த பதவி தற்போது விசிகாவுக்கு செல்ல உள்ளது.

நெல்லிகுப்பதை பொறுத்தவரை நகராட்சி தலைவர் பதவி தான் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த அப்பதவியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரை திமுக நிறுத்தி வெற்றிபெற வைத்துள்ளது. ஆக, திமுக தலைவர் உத்தரவு அவருக்கு (சுயேட்சைக்கு) பொருந்தாது என்பதால், வேறு வழியில்லாமல் துணை தலைவர் ராஜினாமா செய்து, அந்த பதவி விசிகவுக்கு கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NELLIKUPPAM DMK VCK CUDDALORE


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->