முடிவுக்கு வந்தது சிக்கல் | கட்சியை காப்பற்றினார் சரத் பவார்! ஆதிகால ராஜதந்திரம் அப்பே! - Seithipunal
Seithipunal



கடந்த இரண்டு வருடங்களாகவே மகாராஷ்டிரா மாநில அரசியல் பரபரப்பான நிலையில் இருந்து வருகிறது. உத்தவ் தாக்ரேவின் வாரிசு, குடும்ப அரசியல் காரணமாக ஆட்சி இழந்து, சிவசேனா கட்சியே தற்போது முடங்கி போயிருக்கும் நிலையில், அடுத்த அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது அம்மாநிலத்தில்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேசிய காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், தனக்கு ஆதரவாக உள்ள 40 எம்எல்ஏக்களை கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கு அஜித் பவார்மறுப்பு தெரிவித்த நிலையில்,  தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உட்க்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சி உடைந்து விடக்கூடாது என்று முடிவு செய்த சரத் பவார், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இது ஒரு ஆதிகால ராஜா தந்திரம் தான். கட்சிக்குள் பிளவு ஏற்படுவது போல் சூழ்நிலை வந்தால், அந்த கட்சியின் தலைவர் தான் ராஜினாமா செய்வதாக அறிவிப்பார். பின்னர் கட்சியின் தொண்டர்கள் ஒன்று கூடி, தலைவரே...! நீங்கள் தான் தலைவராக தொடர வேண்டும் என்று கோஷமிடுவார்கள். 

அடுத்து என்ன? கட்சிக்குள் மீண்டும் ஒற்றுமை மேலோங்கும், அன்பு அதிகரிக்கும், கட்சிக்குள் உள்ள பிளவுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படத் தொடங்கும்.

இது பல்வேறு மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் ஒரு ஆதி கால அரசியல் ராஜதந்திரம் தான். அதே ராஜதந்திரத்தை கையில் எடுத்த சரத் பவாரின் முயற்சி தற்போது வெற்றி அடைந்துள்ளது.

உயர்மட்ட குழு, அவர் உருவாக்கிய கமிட்டி ஆகியவை அனைத்துமே சரத் பவார் மீண்டும் தலைவராக தொடர வேண்டும் என்று வலியுறுத்தி, தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. மேலும் கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் சரத் பவார் மீதான நம்பிக்கையும், ஆதரவும், அன்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சரத் பவார் கட்சியின் உயர்மட்ட குழு முடிவுகளை மதித்து தான் தலைவராக தொடர்வதாக அறிவித்துள்ளார். மேலும் புதிய உற்சாகத்துடன் கட்சிக்காக பணியாற்ற உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NCP Sharad Pawar plan Successes


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->