#BREAKING : விலைவாசி உயர்வைக் கண்டித்து.. நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம்.! - Seithipunal
Seithipunal


விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 5-ஆம் தேதி) காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகின்றனர்.

அத்தியாவசிய பொருள்கள் விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு விலையேற்றம், ஜிஎஸ்டி, வேலையின்மை போன்றவற்றை கண்டித்து இன்று (ஆகஸ்ட் 5ஆம் தேதி) நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை ஹெரால்டு ஹவுஸ் கட்டடத்தில் இயங்கி வரும் யங் இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை சீல் வைத்தது.

இதனால் டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சோனியா காந்தி இல்லத்தின் முன்பும் அதிக அளவிலான தொண்டர்கள் கூடுவதால், அப்பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், விலைவாசி உயர்வைக் கண்டித்து இன்று (ஆகஸ்ட் 5ஆம் தேதி) நடைபெறவுள்ள காங்கிரஸ் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. ராஷ்டிரபதி பவனை முற்றுகையிடவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்த நிலையில், அப்பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை காவல் துறை பிறப்பித்துள்ளது.

காவல்துறை அனுமதி மறுத்தாலும் இன்று (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nationwide Congress protest against price hike today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->