தேசிய விளையாட்டு நாள்: 'ஒலிம்பிக் பதக்கங்கள்தான் தமிழகத்தின் இலக்கு'...! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - Seithipunal
Seithipunal


இந்திய விளையாட்டுலகின் ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்டு 29-ம் தேதி, நாடு முழுவதும் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழக மக்கள், வீரர்-வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.விளையாட்டு என்பது பதக்கத்தையும் வெற்றியையும் மட்டுமே நோக்கமாக கொண்டதல்ல; அது உடலுக்கு வலிமையையும், மனதுக்கு அமைதியையும் அளித்து, வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் சிறந்த கருவியாகும்.

மேலும், இளைஞர்களை போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட தீய பழக்கங்களில் இருந்து விலக்கி, ஆரோக்கியமான பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் ஆற்றலும் விளையாட்டுக்கு உண்டு.விளையாட்டில் ஈடுபடும் ஒவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்தி, அவர்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்குவதிலும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்காக தொடர்ந்து தங்கப் பதக்கங்களை வென்று நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலேயே தேசிய விளையாட்டு நாள் கொண்டாடப்படுகிறது.

அவரது சாதனைகளையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூரும் இந்த நாளில், இந்தியாவின் சிறப்புமிக்க விளையாட்டு பாரம்பரியத்தை போற்றுவதுடன், அடுத்த தலைமுறையினரிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் விளையாட்டுடன் இணைப்பதும், இளம் திறமைகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தயார்படுத்துவதும் தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக 8 முதல் 18 வயது வரையிலான இளம் விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம், 10 ஒலிம்பிக் சிறப்புப் பயிற்சி மையங்கள், வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள், குளிர்சாதன வசதிகளுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலுடன், தமிழக வீரர்-வீராங்கனைகள் ஒலிம்பிக் அரங்கில் சாதித்து, அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்று இந்தியத் திருநாட்டுக்கு பெருமை சேர்க்கும் நாளை விரைவில் காண்போம்.

தேசிய விளையாட்டு நாளில் விளையாட்டின் சிறப்பை போற்றுவோம்; திறமையான இளம் வீரர்களை ஊக்குவிப்போம்.தமிழக மக்கள் அனைவருக்கும் தேசிய விளையாட்டு நாள் நல்வாழ்த்துகள்.இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

National Sports Day Olympic medals Tamil Nadu goal Minister Adhav Arjuna


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->