மோடி, ஸ்டாலின், உதயநிதி ஒரே மேடையில்.. முழு வீச்சில் தயாராகும் அரங்கம்.!! - Seithipunal
Seithipunal


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19 முதல் ஜனவரி 31 வரை சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் டெல்லி அழைப்பு விடுத்திருந்தார். நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்ததால் நரேந்திர மோடியும் வருவதாக சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் கேலோ இந்தியா தொடக்கவிழா வரும் ஜனவரி 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். மேலும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

narendra modi participate khelo india games ceremony on jan19


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->