பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


கடந்த 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 10 ஆண்டுகள் பிரதமாராக இருந்தார்.

அமைதிக்கு பெயர் போன முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தன்னிச்சையாக செயல்படவில்லை என்றும், அவரை சோனியாகாந்தி தன்  கட்டுப்பாட்டில் இயக்கினார் என்றும் எதிர் கட்சிகள் அவர் மீது குற்றச்சாட்டு வைத்தன.

ஆப்தே சமயத்தில், நரசிம்ம ராவ் ஆட்சிகாலத்தில் தாராளமயக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையை பெற்றவர் மன்மோகன் சிங். 

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வரும் மன்மோகன் சிங்க்கு, நேற்று இரவு திடீர் உடலநல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், மன்மோகன் சிங் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi Manmohan singh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal