மேடையில் கனிமொழி எம்.பி... நரேந்திர மோடி செய்த சம்பவம்.!! இதிலும் அரசியலா? - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஏ.வ வேலு கலந்து கொண்டார்.

அதேபோன்று தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கலந்து கொண்ட நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படாததால் அவர் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார்.

இந்நிலையில் விடா மேடையில் பேச தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ரவி மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டார். 

ஆனால் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஏ.வ வேலு பெயரையும் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெயரையும் குறிப்பிடாமல் தவித்தார். மேலும் திமுக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்தார். அரசு நிகழ்ச்சியிலும் அரசியல் செய்த பிரதமர் நரேந்திர மோடியின் செயலை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர் இணையதள வாசிகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi avoided kanimozhi name in govt function


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->