வருகிற சனிக்கிழமை 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெறுமா? இல்லையா? - மா. சுப்பிரமணியன்
Nalam Kaakum Stalin camp held next Saturday Or not M Subramanian
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னையில் சைதாப்பேட்டை தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், 2-வது வாரத்தில் 48,418 பேரும் பயன்பெற்றுள்ளனர்.
வருகிற சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அன்று அரசு விடுமுறை என்பதுடன், அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக இருக்கிறது.
ஆகையால்,வரும் வாரம் சனிக்கிழமை அன்று, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ரத்து செய்யப்படுகிறது.இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் சனிக்கிழமை, 38 மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்படும்.
குறிப்பாக 6 மாதங்களில், 1,256 இடங்களில் முகாம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Nalam Kaakum Stalin camp held next Saturday Or not M Subramanian