தமிழக சட்டமன்ற தேர்தல் 2026; 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி..!
Naam Tamilar Party has announced candidates for 100 seats
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சியினர் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களை அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
ஆளும் திமுக கூட்டணி காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அதே கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க உள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக பாஜ உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மற்ற கட்சிகளை சேர்க்க முயற்சி செய்து வருகிறது.
மேலும், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை. அத்துடன், நடிகர் விஜய்யின் தவெகவும் இந்த தேர்தலை முதன்முறையாக சந்திக்கவுள்ளது. அக் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என விஜய் அறிவித்தாலும் எந்த கட்சியும் அவருடன் கூட்டணி அமைக்கவில்லை.

இந்த சட்டமன்ற தேர்தலையும் தனித்தே சந்திக்கப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண்களையும், 117 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், 234 வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அறிமுகபடுத்தும் மாநாடு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திருச்சியில் நடக்கும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், முதற்கட்டமாக 100 பெயர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதற்கட்டமாக சீமான் அறிவித்துள்ளார். இப்பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை எனவும், இடும்பாவனம் கார்த்திக், இயக்குநர் களஞ்சியம், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளனர்.
English Summary
Naam Tamilar Party has announced candidates for 100 seats