My TVK! இதுவரை 3லட்சம் பேர் த.வெ.க செயலியில் இணைந்த மாபெரும் வெற்றி!
My TVK So far 3 lakh people have joined TVK app huge success
தமிழக வெற்றிக் கழக கட்சியில் இலக்காக 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பல வசதிகளுடன் 'மை டி.வி.கே.'( my tvk app) செயலி உருவாக்கப்பட்டது.

இதற்கென்றே தனியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை நேற்று கட்சி தலைவர் ''விஜய்'' அறிமுகம் செய்தார்.இந்த செயலி மூலம் 1 வினாடிக்கு,18000 உறுப்பினர்கள் சேர வசதி செய்யப்பட்டுள்ளது.கூடுதலாக விஜய் நேரடியாக தமிழகம் முழுவதுமுள்ள பூத் நிர்வாகிகளை கண்காணித்து அறிவுரை வழங்கவும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முதல் 15 நாட்களுக்கு கட்சியிலுள்ள பூத் முகவர்கள், நிர்வாகிகள் இணைவதற்கும் 15 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் இணையவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்த செயலி வழியாக புதிதாக த.வெ.க.வில் இணைவதற்கு பொதுமக்களிடையும் இளைஞர்கள் இடையும் தீவிர ஆர்வம் உருவாகியுள்ளது.
இதில் நேற்று முதல் பொதுமக்களும் இணைந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது.பிறகு பொதுமக்கள் பலர் 'செயலி' மூலம் கட்சியில் ஆர்வமுடன் சேர ஆரம்பித்தனர். நேற்று முதல் இன்று காலை வரை சுமார் 3 லட்சம் பேர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.மேலும், கட்சியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினர்.
இந்த த.வெ.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பொதுமக்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி நேர்மையான முறையில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வலியுறுத்தி வருகின்றார்.
English Summary
My TVK So far 3 lakh people have joined TVK app huge success