ஏழை மக்கள் தான் என் பரமாத்மா - கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு! - Seithipunal
Seithipunal


 நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை தான் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது காங்கிரஸ் கூட்டணி.  மக்களவையில் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 

ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரு இடங்களிலுமே மிக பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுள்ளார். இந்திய அரசியல் சாசனத்தின் படி ஒரு எம். பி. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். 

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற வைத்ததற்காக கேரளாவில் உள்ள மலபுரத்தில் வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், "எந்த தொகுதி எம். பி. பதவியை நான் ராஜினாமா செய்வது என்று முடிவெடுப்பதில் எனக்கு குழப்பமாக உள்ளது. 


மோடியின் பரமாத்மா மிக விசித்திரமானது. அது அம்பானி, அதானிகளுக்கே எல்லா நன்மைகளையும் செய்யும்படி மோடியிடம் கூறுகிறது. ஆனால் பிரதமர் மோடியை போல் எனக்கு பரமாத்மாவின் வழிகாட்டுதல் இல்லை. என்னிடம் பேசவும் எந்த பரமத்மாவும் இல்லை. 

இந்த நாட்டின் ஏழை மக்கள் தான் என் பரமாத்மா. எந்த தொகுதி எம். பி. யாக நான் தொடர வேண்டும் எனது பரமாத்மாவான வயநாடு தொகுதி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

My God is Poor Peoples Only Rahul Gandhi Speech


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->