#Breaking | தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்.! வெட்டி படுகொலை செய்யப்பட்ட உயிர்.! - Seithipunal
Seithipunal


நேற்று இரவு டாஸ்மார்க் கடை வாசலில் விற்பனையாளர் ஒருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை மூடி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் துளசிதாஸ் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்கள். இவருடன் ராம் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கிளம்பும் போது துளசிதாஸை, டாஸ்மாக் கடையின் வாசலில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.

மேலும், இந்த டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் மற்றொரு ஊழியரான ராம் என்பவரையும் கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட துளசிதாஸ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதே சமயத்தில் படுகாயமடைந்த ராம்.,யை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் அனுமதித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த கொலை சம்பவத்தை கண்டித்து, டாஸ்மாக் கடைகளை அடைத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்கள், உரிய இழப்பீடும், வாரிசுதாரருக்கு பணியமர்த்த கோரியும், திருவாரூர், பழனி, திருவள்ளூர், சேலம், வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder issue tasmac shops closed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->