விருத்தாச்சலத்தில் மீண்டும் முரசு முழக்கம்! 'மக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்' - பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!
Murasu slogans again Viruddhachalam My humble thanks people Premalatha Vijayakanth resilience
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதியில் கணிசமான வெற்றியைப் பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார்.
மொத்தம் 10 தொகுதிகளில் களமிறங்கிய தேமுதிகக்கு இதுவே ஒரே வெற்றியாக அமைந்துள்ள நிலையில், அந்த வெற்றி கட்சித் தொண்டர்களிடையே பேரானந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, விருத்தாச்சலம் மக்களுக்கான தனது நன்றியை பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது,"விருத்தாச்சலம் மக்களே, உங்களின் அன்பும் ஆதரவும் எனக்கு அளித்த இந்த மறக்கமுடியாத வெற்றிக்கு என் இதயம் கனிந்த நன்றி! சட்டமன்றத் தேர்தல் 2026-இல் நீங்கள் அளித்த இந்த பெருமை, என்மீது வைத்துள்ள உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
இது ஒருவரின் வெற்றி அல்ல; நம் அனைவரின் கூட்டு சாதனை.என்னை நம்பி வாக்களித்த ஒவ்வொரு நபருக்கும் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்புடன், உங்கள் குரலாக சட்டமன்றத்தில் உறுதியாக செயல்படுவேன்.விருத்தாச்சலத்தின் முன்னேற்றமும், மக்களின் நலனும் என் முதன்மை இலக்காக இருக்கும்.
முரசு முழங்கட்டும்! உங்கள் அண்ணியார் என்றும் உங்களோடு, உங்களுக்காக!”.இவ்வாறு அவர் உணர்ச்சி பூர்வமாக தெரிவித்துள்ளார்.
English Summary
Murasu slogans again Viruddhachalam My humble thanks people Premalatha Vijayakanth resilience