திமுக-விசிக இடையே களேபரம்! திருமா உதவியை நாடிய எம்.ஆர்.கே! குஷியில் இலை கட்சி! - Seithipunal
Seithipunal


கடலூர் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவை சேர்ந்த சுந்தரி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான ராஜா என்பவரின் மனைவி ஆவார். கடலூர் மாநகராட்சியின் துணை மேயராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தாமரைச்செல்வன் இருந்து வருகிறார்.

சுந்தரி மேயராக பொறுப்பேற்ற பிறகு அவரது கணவர் ராஜாவும், மகன் பாலாஜியும் கடலூர் மாநகராட்சி மேயர் போன்று அதிகாரம் செலுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த நிலையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மேயர் சுந்தரி தரப்பு தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளுக்கு இடையூறாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தாமரைச்செல்வனுக்கு தற்போது அரசு வாகனம் வழங்கவில்லை. இந்த நிலையில் தான் திமுக மேயருக்கும், விசிக துணை மேயருக்கும் இடையே நீடித்து வந்த பனிபோர் பூதாகரமாக வெடித்துள்ளது. சுந்தரியை மேயராக தேர்ந்தெடுக்க திமுக எம்எல்ஏ ஐயப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு சுந்தரியை மேயராக கொண்டு வந்தார்.

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு எதிராக மேயர் சுந்தரியின் அரசியல் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு தேவையற்ற தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொள்ளும் இந்த நிலையில் இருவர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அதிமுக தரப்பு குஷியில் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் திமுக மேயர் சுந்தரியே அதிமுகவுக்கு ரூட் போட்டுக் கொடுத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன.

பரபரப்பான இந்த சூழலில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனை நேரில் சந்தித்து பேசியுள்ள அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடலூர் மாநகராட்சி விவாகரத்தில் கூட்டணிக்கு பங்கம் ஏற்படாத வகையில் சுமூக தீர்வு காண வேண்டும் என பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MRK consult Thiruma regarding cuddalore DMK VCK issue


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->