மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்! புதிய வியூகம் வகுக்கும் மல்லிகார்ஜுன!! - Seithipunal
Seithipunal


பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என்று தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 292 இடங்களில் கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றியது. பாஜக தனிப்பெரும் கட்சியாக 240 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களில் விட 32 இடங்கள் குறைவாகக் கட்சி பெற்றதது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் 16 எம்பிக்களை கொண்ட தெலுங்கு தேச கட்சியும் 12 எம்பிகள் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போதைய மத்திய அரசு சிறுபான்மை அரசு. அந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இது இயல்பான ஒரு நிலை தான். மோடியின் இந்த அரசை மக்கள் சிறுபான்மைய அரசாக ஆக்கி இருக்கிறார்கள்.

கூட்டணி அரசு குறித்து மோடியே பலமுறையும் விமர்சனங்களை வைத்திருக்கிறார். கூட்டணி அரசு என்பது கிச்சடி அரசும் என்றும், பெரும்பான்மை இல்லாத கூட்டு நேரசை என்பது எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi government can fall anytime Mallikarjuna who makes a new strategy


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->