திமுகவுடன் கூட்டணியில் சேருமா ம.நீ.ம? - இன்று வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், தமிழிககத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழாவில் கமல்ஹாசன் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க விழாவை முன்னிட்டு இன்று கட்சி அலுவலகத்திற்குச் செல்லும் கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கூட்டணி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடலாம் என்று தெரிகிறது.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் போது, இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM party leader kamalhaasan announce aliance with dmk for parliment election today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->