எம்.எல்.ஏ., விஜயதாரணியை அதிரடியாக கைதுசெய்த போலீசார்.! நாகர்கோவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஏர் கலப்பையுடன் பேரணி செல்ல முயன்ற 2 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 'டெல்லி சலோ' என்ற பேரணியை, தலைநகர் டெல்லியை நோக்கி மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், நாகர்கோவிலில் ஏர் கலப்பையுடன் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர். இதில் குளச்சல் தொகுதி எம் எல் ஏ பிரிண்ஸ், விளவங்கோடு எம் எல் ஏ விஜயதாரணி மற்றும் காங்கிரஸ் தேசிய குழு உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற வசந்த் விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "இந்தியா முழுவதும் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மக்களுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும். அந்த வகையில் இந்த போராட்டம் இன்று நடைபெற்றுள்ளது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla vijayadharani arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal