அதிரடி திருப்பம்.. மொத்தமாக மாறும் அமைச்சர்களின் இலக்காகள்.. விழாவுக்கு தயாராகும் ஆளுநர் மாளிகை..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல் வெளியாகி வந்த நிலையில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு தமிழக அமைச்சரவையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

வரும் மே 11ம் தேதி காலை 10:30 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பி இருந்த நிலையில் தற்பொழுது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பல மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளன. தற்பொழுது புதிதாக அமைச்சர் பதவி ஏற்க இருக்கும் டி.ஆர்.பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட உள்ளது.

அதேபோன்று நிதி அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறையும், தற்பொழுது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜுக்கு பால்வள துறையும் ஒதுக்கப்பட உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போன்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக தமிழரசி ரவிக்குமார் நியமிக்க படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட போவது உறுதியான நிலையில் அமைச்சர்களின் இலக்க மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் நாளை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் வரும் மே 11ம் தேதி காலை நடைபெறும் ஆளுநர் மாளிகை விழாவில் பதவி ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல மூத்த அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin decide to change portfolios of many ministers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->