#BREAKING | மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி | திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 3ம் தேதி அமைதிப் பேரணி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, வாலாஜா சாலை முதல் காமராஜர் சாலை அண்ணா நினைவிடம் வரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த பேரணி நடைபெற உள்ளது.

பிப்ரவரி 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு இந்த பேரணி நடைபெற உள்ளதாக திமுக தலைமை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக தரப்பில் வெளியான அறிக்கையில், ”காஞ்சி தந்த காவியத் தலைவர் - உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலுவீற்றிறிருக்கும்  செந்தமிழர் அறிஞர் - தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும்,  தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம்  ஓயாது பாடுபட்ட உத்தமர் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும்  தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த  ஆற்றலாளர் -  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்  என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன்,  மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை  தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த  தனிப் பெரும் தனயன் - சுயமரியாதை சுடரொளி - சொக்க வைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்து வேந்தர் தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர்,  பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி, 

முதல்வரும், திமுக தலைவருமான  மு.க. ஸ்டாலின் தலைமையில்,  பொதுச்செயலாளர் துரைமுருகன்,  பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் கட்சியைச் சேர்ந்த முன்னணியினர் பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை காலை 07:00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள  அண்ணா நினைவிடத்தில்  மலை வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில்  உள்ள  பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை  சென்றடையும். கட்சியின் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுபினர்கள், கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் அண்ணன் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்” என,  சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு,  சென்னை வடகிழக்கு ஆகிய மாவட்ட திமுக  சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin perani dmk announce


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->