மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி; 30 கிலோ சிறுதானிய இட்லியில் மு.க.ஸ்டாலின் உருவம் மற்றும் உதயசூரியன் சின்னம்: சமையல் கலைஞர்கள் அசத்தல்..!
MK Stalin Likeness and the Rising Sun Symbol Crafted on a 30 Kilogram Millet Idli
திமுக தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக, கொடுங்கையூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் சுமார் 30 கிலோ சிறு தானிய இட்லி மாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உருவத்தையும் உதயசூரியன் சின்னத்தையும் வடிவமைத்து காட்சிப்படுத்தி எல்லோரையையும் ஆச்சரியம் படுத்தியுள்ளனர்.
நாளைய தினம் தேர்தலில் பதிவானாகி வாக்குகன் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அத்துடன், கடந்த 29 ஆம் தேதி வெளியான தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பில் படி, திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளன. இதனால் திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நாளை திமுகவின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் வயதை குறிப்பிடும் வகையில் 73 கிலோ எடை கொண்ட பிரமாண்ட இட்லியை தயாரித்து அண்ணா அறிவாலயத்தில் காட்சிப்படுத்த உள்ளதாக கொடுங்கையூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் இட்லி இனியவன் குறிப்பிட்டுள்ளதாவது;

''எங்களது தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் உள்ள பலரும் திமுக ஆட்சியில் பயனடைந்துள்ளனர். திமுக ஆட்சி தொடரவேண்டும் என்று கருதுகிறோம். அதனை குறிக்கும் வகையில் வெற்றி முன்னோட்டமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 30 கிலோ சிறுதானிய இட்லியில் மு.க.ஸ்டாலின் உருவம், உதயசூரியன் சின்னத்தை வடிவமைத்துள்ளோம்.
நாளை வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அண்ணா அறிவாலயத்தில் 73 கிலோ எடை கொண்ட ஸ்டாலின் உருவம் அச்சிடப்பட்ட பிரமாண்ட இட்லியை தயாரித்து அதனை காட்சிப்படுத்த உள்ளோம். திமுக ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை நாங்கள் செய்துள்ளோம். கண்டிப்பாக ஆட்சி தொடரும்'' என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
English Summary
MK Stalin Likeness and the Rising Sun Symbol Crafted on a 30 Kilogram Millet Idli