ஓபிஎஸ் வீட்டிற்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பயணம்.!
mk stalin going to ops house
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த இரு மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அரசியல் பணிக்கு மத்தியில், ஓபிஎஸ் மருத்துவமனையில் சென்று தாயை பார்த்துக்கொண்டு சென்னைக்கும் தேனிக்கும் சென்று வந்தார்.ஆனால், தாயின் உடல்நிலை தேறாமல் உடல்நிலை மிகவும் மோசமாகி கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அவர் உயிரிழந்தார். கடந்தாண்டு தனது மனைவியை இழந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் தனது தாயையும் இழந்து நிற்கின்றார்.

சென்னை மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் இருக்கும் ஓபிஎஸ் இல்லத்திற்கு தாயார் பழனியம்மாளின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.
ஓபிஎஸ் தாயாரின் இறுதிச்சடங்கு நடந்த நாளில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓபிஎஸ்ஐ நேராக சந்தித்து இரங்கல்களை தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற அவருடைய இல்லத்திற்கு செல்கின்றார்.
English Summary
mk stalin going to ops house