முதலமைச்சர் மு க ஸ்டாலின் சோகத்தில் ஆழ்த்திய மரணம்.!! - Seithipunal
Seithipunal


வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று, உடல்நலக்குறைவால் காலமான அவரது மனைவி மீனா சுவாமிநாதன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மீனா சுவாமிநாதன் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், வேளாண் ஆய்வறிஞர் திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களது வாழ்க்கைத் துணைவியார் திருமிகு. மீனா சுவாமிநாதன் அவர்களது மறைவுச் செய்தியறிந்து வருந்தினேன். சிறந்த கல்வியாளராகவும் பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவால் வாடும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin condolences on the death of swaminathan wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->