எங்கே இருக்கிறார்கள்..? அபிஜீத் திப்கே, நேஹா போரா கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


டெல்லி போலீசாரின் தடையை மீறி, சிஜேபி அமைப்பினரின் மூவர்ண கொடி போராட்ட பேரணியில் கலந்துக்கொண்ட அந்த அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் மாணவர் அணி தலைவர் நேஹா போரா ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அபிஜீத் திப்கே, நேஹா போரா கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''அபிஜீத் திப்கே, எங்கே? நேஹா போரா எங்கே?

அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிவிக்காமல் அவர்களைக் காவலில் வைத்திருப்பது, வெளிப்படையான சட்டவிரோதச் செயல் மற்றும் மிகுந்த மனிதாபிமானமற்ற செயலாகும்.

மத்திய அரசு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும். இந்த இயக்கத்தை நசுக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும், அதை இன்னும் வலிமையாக்கவே செய்யும்.

#GyaneshKumarMustGo. மத்திய பாஜக அரசுக்கு வேறு வழியில்லை.'' என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin condemns the arrest of Abhijit Dipke and Neha Bora


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->