#சற்றுமுன்: சட்டப்பேரவையில் முக ஸ்டாலின் ஆவேச பேச்சு., அதிரடி தீர்மானம்!
MK STALIN assembly speech sep 16
மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று இறுதி நாள் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து வருகிறார், அதில், வரதட்சணை கொடுமைக்கு அதிகபட்ச தண்டனையாக 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்ததை, 10 வருடங்களாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். பெண்களை பின்தொடரும் குற்றத்திற்கு 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது." என
முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார். குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் புதிய கல்விக் கொள்கை என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
MK STALIN assembly speech sep 16