திடீர் ட்விஸ்ட்.. தி.மு.க கூட்டணிக்கு ம.ஜ.க ஆதரவு.!! அதிர்ச்சியில் ஈ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நாளை முதல் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 

திமுக நேரடியாக போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கான பட்டியல் நாளை வெளியாக உள்ள நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். 

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை நேரடியாக சந்தித்த தமீமுன் அன்சாரி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மாண்புகள், சமூக நல்லிணக்கம் காப்பாற்ற இந்தியா கூட்டணி ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். இதன் காரணமாக திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தமிமுன் அன்சாரி விளக்கம் அளித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக வெளியேறிய பிறகு தமிமுன் அன்சாரி எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mjk support to DMK alliance in loksabha election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->