அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை.!
Minister Sekarbabu brother Devaraj hanged suicide
அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணனான பி.கே தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணனான பி.கே தேவராஜ் என்பவர் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தேவராஜ் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அவர் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Minister Sekarbabu brother Devaraj hanged suicide