வாயை திறந்தா பொய்! டெபாசிட் வாங்கிவிட்டு பேசுங்க சீமான் - கொந்தளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏதாவது ஒரு தேர்தலிலாவது டெபாசிட் வாங்கிவிட்டு திமுக தலைவர்களை பற்றி பேச வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கேரளா மாவட்டம் இடுக்கி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்ததாவது, விக்கிரவாண்டி இடத் தேர்தலில் திமுகவின் வெற்றி மதவாதத்தை பற்றி பேசும் பாஜக விற்கு தகுந்த பாடத்தை கற்பித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதில் 10 இடங்களை இந்தியா கூட்டணி வென்றுள்ளது. மக்களவைத் தேர்தலை தொடர்ந்து சட்டமன்ற இடை தேர்தலில் பாஜகவிற்கு கடும் பின்னடைவு சந்தித்துள்ளது. அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

பெரியார், அண்ணன், கருணாநிதி போன்ற திராவிட தலைவர்களை தொடர்ந்த சீமான் அவதூறுவாக பேசி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்கள் குறித்து பேசி இளைஞர்களின் உணர்வுடன் சீமான் விளையாடிய வருகிறார். 

ஈழத் தமிழத்தின் வரலாற்றை கற்றுக் கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு வரலாறு மற்றும் தமிழ் சமூகம் குறித்து சீமான் தெரிந்து கொள்ள வேண்டும். சீமான் ஒரு தேர்தலிலாவது முழுமையான டெபாசிட் வாங்க முடிந்ததா? முதலில் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை டெபாசிட் வாங்க வைத்துவிட்டு பின்னர் திமுக தலைவர்களை குறித்து பேசட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Mano Thangaraj said that Seeman should take a deposit in one or the other election and talk about the DMK leaders


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->