போலி கல்லூரிகளை மாணவர்கள், பெற்றோர்களே கண்டுபிடிக்கும் - திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
Minister Ma Subramanian video viral
தி.மு.க. அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு எதிர்பாராத விமர்சனங்களை எதிர்கொள்வது அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் பொன்முடி பதவி, கட்சி பொறுப்புபை அக்கட்சியின் தலைமை பறித்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்தது.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனின் கருத்து ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், போலியான கல்லூரிகள் உருவாகி மாணவர்கள் ஏமாறுகிறார்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “எது உண்மையான கல்லூரி, எது போலி என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
மருத்துவம் போன்ற துறைகளில் போலி கல்லூரிகள் இருப்பதைப் பற்றி கூறப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அமைச்சரின் இந்த பதில், போலி கல்லூரிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து, போலி கல்லூரிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசின் கடமை இல்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கடமை என்பது உள்ளது.
இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Minister Ma Subramanian video viral